போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Tuesday, 14 July 2020 - 13:51

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு நிவாரணம் காலம் வழங்கியுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் காலாவதியாகும் திகதியிலிருந்து அந்த சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.