சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை

Thursday, 16 July 2020 - 13:50

%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
மனித செயற்பாடுகள் காரணமாக சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி 38 பாகை செல்சியஸ் சைபீரியா - வர்கொயான்க்ஸ் நகரில் பதிவாகியுள்ளது.

மனித செயற்பாடுகள் தவிர்த்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இவ்வாறு கடும் வெப்ப காலநிலை நிலவும் என ஐக்கிய நாடுகள் காலைநிலை தொடர்பிலான பிரிவு தெரிவித்துள்ளது.

சைபீரியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 5 பாகை செல்ஸியசினால் வெப்ப காலநிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆர்டிக் பிரதேசத்தில் சாதாரண வெப்ப காலநிலையினை விட இரு மடங்கு வெப்ப நிலை அதிகரிகத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips