ஹெரோயினுடன் கைதான நபர்களின் வங்கிக் கணக்கில் 75 மில்லியன் ரூபாய் இருப்பு..!

Saturday, 01 August 2020 - 17:06

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+75+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
ஹெரோயினுடன் நேற்று ராஜகரிய பகுதியில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களின் 4 வங்கிக்கணக்குளில் 750 இலட்ச ரூபா வைப்பிடலப்பட்டுள்ளதாக வெலிக்கடை காவற்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நிதி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

ஹெரோயினுடன் சிற்றூர்ந்து ஒன்றில் நேற்று ராஜகிரிய பகுதியில் பயணித்த போது குறித்த 3 சந்தேகத்திற்குரியவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து 9 கிராமுக்கும் அதிக அளவில் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்ததது.

இந்த நிலையில் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.