அப்பா ஆனார் ஹர்திக் பாண்டியா-வெளியானது புகைப்படம்

Sunday, 02 August 2020 - 7:54

%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும் துடுப்பாட்ட வீரருமானவர் ஹர்திக் பாண்டியா .

இவர் செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டு காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்பின் ஊரடங்கு காலப்பகுதியில் அவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது.

புகைப்படம் வெளியானபோதுதான் வெளி உலகத்திற்கு தெரியவந்தது இவர்களின் திருமணம் முடிந்து விட்டது என.

கடந்த ஒருமாதமாக தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்டியா வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா- நடாசா ஸ்டான்கோவிச் தம்பதிக்கு சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.