தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

Sunday, 02 August 2020 - 9:37

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88......%21
தென்னாப்பிரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அரை மில்லியனை கடந்துள்ளது.

அந்த நாட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்றைய தினம் மாத்திரம் 10 ஆயிரத்து 107 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய தென்னாப்பிரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகமானோருக்கு தென்னாப்பிரிக்காவிலேயே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, மற்றும் இந்தியலை தொடர்ந்து அதிகமானோர் தென்னாப்பிரிக்காவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் ஒரு கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 390 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.