காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! ஒரே இரவில் 14 பெண்கள் கைது

Sunday, 02 August 2020 - 9:48

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...%21+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+14+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
உயர் காவல்துறை அதிகாரியின் பெயரை போலியாக பயன்படுத்தி மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று உடல் பிடிப்பு நிலையங்களிலுள்ள 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 காரணமாக உடல் பிடிப்பு நிலையங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த உடல் பிடிப்பு நிலையங்கள் நடாத்தி செல்லப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 14 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொம்பனித்தெரு, தலங்கமை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள உடல் பிடிப்பு நிலையங்களில் பணியாற்றியவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 வரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின், கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட சட்டவிரோத போதை பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.