சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தி 86 பேர் பலி...!

Sunday, 02 August 2020 - 13:31

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+86+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
வட இந்திய பஞ்சாப் மானிலத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நச்சுகலந்த மதுபானத்தை அருந்தி மரணித்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்படும் சந்தேகத்திற்கு இடமான நூற்றுக்கும் அதிகமான பிரதேசங்களில் காவல்துறையினர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு 25 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் கிராமிய பிரதேசங்களில் சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துவதனால் வருடாந்தரம் நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஒன்றினை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை ஒன்றினை வழங்கும்படி பஞ்சாப் முதலமைச்சர் அமிரிண்ட சிங் உத்தரவிட்டுள்ளார்.