வெற்றிகரமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை..!

Sunday, 02 August 2020 - 10:43

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88..%21
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்தை சாதக தன்மையில் நிறைவடைந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வீரகெட்டியவில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கிழக்கு முனையம் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெத்திருந்த நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய தமது தொழிற்சங்க நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு பின்னர் இன்றைய தினத்திற்குள் அறிவிக்கப்படும் என கொழும்பு துறைமுக வர்த்தக கைத்தொழில் மற்றும் சேவை முற்போக்கு பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சியாமல் சுமனரத்ன தெரிவித்துள்ளார்.