சற்று முன்னர் செம்பு சமந்த கைது...!

Sunday, 02 August 2020 - 12:51

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் மெனிக்கின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியாவைச் சேர்ந்த செம்பு சமந்த என அறியப்படும் சமந்த குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர், பலவந்தமாக சொத்துக்களை கையகப்படுத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரின் உதவியாளர் கிரேன்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கோனா சாந்த என அறியப்படும் சாந்த குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.