தப்பி சென்ற சந்தேக நபர்கள்..!

Sunday, 02 August 2020 - 12:56

%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவர் மீது ஏறி இன்று அதிகாலை அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகள் பேருவளை, களுத்துறை பகுதிகளை சேர்ந்த 24, 23 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தப்பிச் சென்றுள்ள கைதிகளை கைது செய்வதற்காக பல காவல்துறை குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.