இந்தியாவில் தீ விபத்து எண்மர் பலி

Thursday, 06 August 2020 - 10:31

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 19 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.