குருநாகல் நகரசபை தலைவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

Thursday, 06 August 2020 - 12:29

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
குருநாகல் நகர முதல்வர், நகர ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை பிடியாணைப் பெற்று கைது செய்யுமாறு, சட்டமா அதிபரினால் பதில் காவற்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குருநாகலை நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து கட்டிடம் ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் நிமித்தம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இந்த தகவலை வழங்கினார்.