நிராகரிக்கப்பட்ட மனு

Friday, 07 August 2020 - 13:52

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81
 ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்கும், தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான புவனேக அளுவிஹார, எல்.ரி.பீ. தெஹிதெனிய, மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்து மனு கடந்த மாதமம் 27 ஆம் திகதி உயர்நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதியரசர் ப்ரியந்த ஜயவர்தன தனிப்பட்ட காரணங்களினால் விசாரணை ஆயத்திலிருந்த விலகியிருந்தார்.

இதன் காரணமாக அந்த மனுவை இன்றைய தினம் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips