கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த விடுதியில் தீ பரவல்

Sunday, 09 August 2020 - 10:02

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சுகாதார பிரிவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரனோ நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டல் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக மருத்துவமனையில் இடமில்லாததால் கொரோனா நோயாளிகள் சிலர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா என்ற நகரில் கொரோனா நோயாளிகள் ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர் அந்த விடுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த தீவிபத்தில் விடுதியில் தங்கியிருந்த கோரானோ நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது