லெபனானுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐநா தலைமையில் இன்று ஆலோசனை

Sunday, 09 August 2020 - 13:47

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
அமோனியம் நைட்ரேட் என்ற இரசாயன பொருள் வெடித்து சிதறியதால் கடுமையாக பாதிக்கப்பட்ட லெபனான் தலைநகரம் பெய்ரூட்டுக்கு உதவ உலக நாடுகளின் தலைவர்களுடன் இன்று (09) ஐ.நா. தலைமையில் ஆலோசனை நடத்த போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லெபனானுக்கு உதவ விரும்பும் நாடுகளின் மாநாடு காணொளிக் காட்சி முறையில் நடைபெறும் லெபனான் தலைவர்களுடனும் உலக நாடுகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும்.

காணொளி காட்சி முறையில் நடைபெறும் மாநாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலைமை வகிக்கும் இந்த மாநாட்டுக்கு இணைத் தலைவராக பிரான்ஸ் செயல்படும் என்று மாக்ரோன் தெரிவித்தார்.

மேலும் உலக நாடுகள் லெபனானுக்கு வழங்கும் உதவிப் பொருள்களை லெபனான் மக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேர என்ன செய்யலாம் என்று காணொளிக் காட்சி மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மக்ரோன் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார் என மாக்ரோன் தெரிவித்தார்.