இலங்கையில் நேற்று மாத்திரம் இத்தனை கொரோனா தொற்றாளர்களா..?

Tuesday, 11 August 2020 - 7:17

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE..%3F+
நாட்டில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

சேனபுர முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 கைதிகளுக்கும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேரும் அதில் அடங்குகின்றனர்.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 14 பேர் நேற்றைய தினம் குணமடைந்துள்ளனர்.

இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,593 ஆக அதிகரித்துள்ளது.