இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 53,601 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Tuesday, 11 August 2020 - 11:37

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+53%2C601+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
சர்வதேச ரீதியில் நேற்றைய தினம் இந்தியாவிலேயே அதிகளவானோர் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் 53 ஆயிரத்து 601 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் கொரோனா வைரசால் 871 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 15 லட்சத்து 83 ஆயிரத்து 489 பேர் குணமடைந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நேற்றைய தினம் அமெரிக்காவிலேயே அதிகளவானோருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த நாட்டில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 51 ஆயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் 569 பேர் உயிரிழந்துள்ளமைக்கு அமைய அந்த நாட்டில் இதுவரை குறித்த தொற்றால் 1 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 7 லட்சத்து 38 ஆயிரத்திற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளதுடன் 2 கோடியே 2 லட்சத்து 57 ஆயிரத்து 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றிலிருந்து 1 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.