ரஷ்யாவுடன் பங்கேற்கத் தயார் - பிலிப்பைன்ஸ்

Tuesday, 11 August 2020 - 14:20

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
ரஷ்யா உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதிப்பதில் பங்கேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரொட்கோ டுடரேட் இதனை தெரிவித்துள்ளார்.

 ரஷ்யா கொவிட் 19 தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை ஒப்புதலை இந்த மாதத்தில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸுக்கு சோதனை செய்வதற்காக அல்லது ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து  நாட்டில் பாரியளவில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.

ரஷ்ய கொவிட் 19 தடுப்பூசியை தமது நாடு இலவசமாகப் பெறும் என்பதனை எதிர்ப்பார்ப்பதாகவும் பிலிப்பைன்ஸ்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36 ஆயிரம் வரையில் அண்மித்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 294 பேராக பதிவாகியுள்ளது.