இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன..!

Friday, 14 August 2020 - 7:56

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9..%21
கொவிட்- தொற்றுறுதியான இரண்டு பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்து மூடப்பட்ட லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் அந்த பிரதேச சபை என்பன இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த காரியாலயங்களில் பணியாற்றிய பணிக்குழாமினர் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்க முடியும் என லங்காபுர சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை 30 மற்றும் ஆகஸ்ட் 03 ஆம் திகதிகளில் லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயத்தின் உதவியாளர் மற்றும் சிவில் பாதுகாப்பு சிப்பாய்க்கு கொரோனா தொற்றுறுதியானது.

இதனையடுத்து, லங்காபுர பிரதேச செயலாளர் காரியலயம் மற்றும் அந்த பிரதேச சபையை மூடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார தரப்பினர் மேற்கொண்டனர்.

அத்துடன் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 891 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் தொடர்ந்தும் 30 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக லங்காபுர சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றையதினம் மேலும் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 882 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 8 பேர் நேற்று குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 646 பேர் குணமடைந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றுறுதியான 225 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.