உறவை வலுப்படுத்தும் வகையில் உடன்படிக்கை

Friday, 14 August 2020 - 8:13

%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய மேற்கு கரையின் சில பகுதிகளை இணைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களை இடைநிறுத்துவதற்கு இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது.

வளைகுடா பகுதியிலுள்ள அரபு நாடுகளுடன் இஸ்ரேல் இதுவரையில் ஒப்பந்தங்களை கைச்சாத்திடவில்லை.

இந்தநிலையில் இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று நிகழ்வு என வர்ணித்துள்ளார்

எவ்வாறாயினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கை துரோக செயல் என பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள பாலஸ்தீன தூதுவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேல் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஐக்கிய அரபு ராச்சியம் உட்பட 3 நாடுகளுடன் மாத்திரமே சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது.