சற்று முன்னர் எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா...!

Friday, 14 August 2020 - 21:26

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE...%21
பின்னணி பாடகர் எஸ் பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அவரது மனைவியான சாவித்திரிக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தற்போது உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.