3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளது..!

Saturday, 15 August 2020 - 12:24

3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..%21
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார்.

அதன்பின்னர், நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் அனுமதி வழங்கியவுடன், நாட்டில் மிகப்பெரிய அளவில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்றும், கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் மோடி கூறியுள்ளார்.