இந்திய - சீன எல்லைப் பிரச்சினையில், இதுவரையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய கூட்டத்தொடரில், சீனாவுடனான எல்லைப் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் பதிலளித்தபோது, குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மற்றும் வழக்கமான எல்லை சீரமைப்பை சீனா அங்கீகரிக்கவில்லை.
இந்த சீரமைப்பு நன்கு நிறுவப்பட்ட புவியியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று நாம் கருதுகிறோம்.
இரு நாட்டு எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகிலும், உள்பகுதியிலும் இராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் சீனா குவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பதிலளிப்பதாக எல்லைப்பகுதியில் இந்தியாவும் இராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது.
லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியை சீனா தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்துள்ளது.
அத்துடன், சீன-பாகிஸ்தான் எல்லை உடன்படிக்கை என்று கூறப்படும் ஒப்பந்தத்தில், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் 5 ஆயிரத்து 180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், இந்தியா - சீனா இடையேயான உறவு மேம்பட எல்லையில் அமைதி மிகவும் முக்கியமானதாகும் என்றும் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.