ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தெரிவு

Wednesday, 16 September 2020 - 11:04

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பை அடுத்து அவர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சீரற்ற உடல்நிலை காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் ஷின் ஷோ அபே அறிவித்திருந்தார்.

புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரையில் அவர் பிரதமராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் சார்பில் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

71 வயதான யோஷிஹிடே சுகா முன்னதாக அமைச்சரவையில் தலைமை செயலாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.