பாலியல் கப்பம் கோரிய பிரதி முகாமையாளர்...! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி...!

Wednesday, 16 September 2020 - 16:24

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D...%21+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...%21
வீடு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இயங்கும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் பிரதி முகாமையாளர் அங்கு சேவையாற்றும் பெண் ஒருவரிடம் பாலியல் கப்பம் கோரிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.

இது தொடர்பில் குறித்த அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சரண கருணாரத்னவிடம் தொடர்பு கொண்டு நாம் வினவினோம்.

இதற்கு பதிலளித்த அவர், இந்த சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒன்றாகும் என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அகசாட்சிய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.