இந்தியாவில் 50 இலட்சம் தொற்றாளர்களை கடந்த கொரோனா..!

Wednesday, 16 September 2020 - 19:52

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+50+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 123 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், ஆயிரத்து 290 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர்.

இதன்படி, கொவிட்-19 காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 82 ஆயிரத்து 961 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39 இலட்சத்து 42 ஆயிரத்து 360 அதிகரித்துள்ளது.

9 இலட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.