அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படாத அறிக்கை..!

Thursday, 17 September 2020 - 7:33

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்த அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதும், அந்த அறிக்கை இன்னும் சமர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவில் கூறப்பட்டிருந்த சிலவிடயங்களை திருத்துவதற்கு, இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட இரட்டைக்குடியுரிமை கொண்டோர் இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதற்கான தடை, 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பதவிக்கு மாத்திரம் மட்டுப்படுத்த இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி பதவி தவிர்ந்த, ஏனைய அரசியல் பதவிகளுக்கு இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் போட்டியிட முடியும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அமைச்சரவையின் அமைச்சர்கள் எண்ணிக்கையை 19ம் திருத்தச் சட்டத்தின் காணப்படுவதைப் போன்றே மட்டுப்படுத்த வேண்டும் என்றும் 20ம் திருத்தச் சட்டமூலவரைவினை ஆராய்ந்த குழு பரிந்துரைத்துள்ளது.