ஒன்லைன் முறையில் மோசடி..! மக்களே அவதானம்

Thursday, 17 September 2020 - 8:55

%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF..%21+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பற்றுச்சீற்று வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசு வெளிநாடுகளில் காத்திருக்கிறது என தெரிவித்து ஒன்லைன் முறைமையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோசடி சம்பவம் தொடர்பில் இதுவரையில் 101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நைஜீரியா பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.