அடுத்தவருடத்திற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம்..!

Thursday, 17 September 2020 - 13:41

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
அடுத்தவருடத்திற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் வாரத்தில் நாடாளுமன்றில் முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான யோசனையை நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவையில் முன்வைத்தார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களுக்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கும் போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எந்த அதிகாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுக்கள் போலியானது என்று இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.