ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று பேர் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..!

Thursday, 17 September 2020 - 12:32

%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+2+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..%21
போலி சாட்சியங்கள் சோடித்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 3 பேரையும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரியவர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் நான்காவது சந்தேகநபர் சட்டத்தரணியின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதன் பின்னர் கைதானதுடன் அவர் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஷானி அபேசேகர வழக்கின் முதலாவது சந்தேகத்திற்குரியவராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், எம்பிலிப்பட்டி காவல்நிலையத்தில் கடமையாற்றிய உப காவற்துறை பரிசோதரும், 3வது சந்தேகநபராக நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ள குற்றப்புலனாய் திணைக்களத்தின் முன்னாள் காவற்துறை பரிசோதகர் நிஷாந்த சில்வாவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கு, சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.