ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய ஹரின் பெர்ணாண்டோ..!

Thursday, 17 September 2020 - 13:44

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B..%21
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியம் வழங்கியிருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெறும் போது தாம் பதுளையில் இருந்ததாகவும், அது தொடர்பில் அறிந்த பின்னர் அப்போதிருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி மூலம் அழைத்து வானூர்தி ஊடாக கொழும்பிற்கு வருகைத்தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் தங்களது தந்தைக்கும், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு காணப்பட்டதா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதில் வழங்கிய ஹரின் பெர்ணாண்டோ, அவருக்கு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் தொடர்பு காணப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.