அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் தொடரும் விசாரணைகள்..!

Thursday, 17 September 2020 - 13:45

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வாக்குமூலம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் இன்று முற்பகல் 10.20 அளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகத்திற்குரியர் காவற்துறையில் இருந்த தப்பிச்சென்று நீரில் மூழ்கி பலியானமை தொடர்பில் தான் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு 10 வருடகாலம் சிறை வைக்கப்பட்டதாக சுன்னாகம் காவற்துறையில் பணியாற்றிய காவற்துறை கான்ஸ்ரபில் ஒருவர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தங்களுக்கு அமைய தான் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டிருக்க கூடும் என அவர் வழங்கிய சாட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்கான முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்றைய தினம் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.