முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 3 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதி ஆராய கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவால் செலுத்தப்பட்ட ஜீப் வண்டி ஊடாக சங்தீப் சம்பத் என்ற இளைஞர் படுகாயங்களுக்கு உள்ளாக்கியமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுக்களின் கீழ்; பட்டாலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி மற்றும் வெலிக்கடை காவல்நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.