விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் ஐ.நா சபை- பிரதமர் மோடி

Tuesday, 22 September 2020 - 7:37

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின், 75 ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் தொலைகாணொளி மூலம் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித வரலாற்றில் முதல் முறையாக ஒட்டுமொத்த உலகத்திற்கென்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. கொடியின் கீழ் அமைதிக்கும், வளர்ச்சிக்குமான காரணத்தை முன்வைத்த அனைவருக்கும் தாங்கள் மரியாதை செலுத்துவதுடன், அதில் இந்தியா ஒரு முன்னணி பங்களிப்பாளராக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோதல் தடுப்பு, வளர்ச்சியை உறுதி செய்தல், பருவநிலை மாற்றம், சமத்துவமின்மையை குறைத்தல், எண்மான தொழில்நுட்பத்தை மேம்பத்துதல் ஆகிய பிரகனடத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தத்தின் அவசியத்தையும் இந்த பிரகடனம் ஒப்புக்கொள்கிறது.

காலாவதியான கட்டமைப்புகளுடன் இன்றைய சவால்களை எதிர்த்துப் போராட முடியாது.

விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்கிறது.

ஒன்றுக்கொன்று இணைந்த இன்றைய உலகில் யதார்த்தங்களை பிரதிபலிக்கும், அனைத்து பங்குதாரர்களுக்கும் குரல் கொடுக்கும், சவால்களை எதிர்கொள்ளும் மனித நலனில் கவனம் செலுத்தும் பன்முகத்தன்மை உடைய சீர்திருத்தங்கள் அவசியமாவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.