சோகத்தில் வாடும் புவெலிகட பிரதேசம்- அயலவரின் வீட்டில் வைக்கப்பட்டள்ள மூவரின் பூதவுடல்கள் (காணொளி)

Tuesday, 22 September 2020 - 8:19

%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கண்டி, புவெலிகட பகுதி சங்கமித்த மாவத்தையில் ஐந்து மாடி வீடு இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

சாமில பிரசாத் (35), அச்சலா ஏகநாயக்க (32) மற்றும் அவர்களது ஒன்றரை மாத வயதுடைய குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.

மீட்பு பணியாளர்கள் காலையிலேயே குழந்தையை மீட்டு கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில் மீட்கப்பட்ட சாமில பிரசாத், அச்சலா ஏகநாயக்க ஆகியோரின் பூதவுடல்கள் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த அச்சலா ஏகநாயக்க ஒரு சட்டத்தரணி. திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

கணவர் சாமில பிரசாத் அதே இடத்தில் ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையைில் சம்பவத்தின் போது கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியை தவிர, மிகுதி அனைத்து பகுதிகளும் இடிந்து விழுந்துள்ளது.

கட்டிடம் இடிந்து விழும் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அதிகாலை 3 மணிக்கே கட்டிட உரிமையாளர் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறி விட்டார்.

கட்டிடம் இடிந்து அருகிலிருந்த இரண்டு வீடுகளின் மீது விழுந்துள்ளது. அதில் அயல் வீடொன்றில் வசித்த தம்பதியும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அச்சலா ஏகநாயக்கரின் தாயார் ஜெயந்தி ஏகநாயக்க (60) தெரிவித்தபோது-

“நான் ஹோட்டலில் பணிபுரியும் இளைய மகளுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அடுத்த அறையில் மகள், கணவன், பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணியளவில் ஒரு பெரிய சத்தம் வந்தது.

எதுவும் தெரியவில்லை. அறையின் சுவர்கள் உடைக்கப்பட்டு மூடப்பட்டேன். இருட்டில் எதுவும் தோன்றவில்லை. மெதுவாக தடவி படுக்கையின் அருகே தொலைபேசியைப் எடுத்தேன். அங்கிருந்தபடியே 119 ஐ அழைத்து சொன்னேன். சிறிது நேரத்தில் காவல்துறையினர் வந்தனர்.

ஒரு குழு எம்மை கயிறு மூலம் மீட்டனர். எமக்கு முன்பாக இருந்த மகள், மருமகன், குழந்தை இருந்த அறை முற்றாக இடிந்திருந்தது”

இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டிடத்தின் உரிமையாளர், அவரது குடும்பத்தினர், அயலவர்கள் யாரும் காயமடையவில்லை

வீட்டு உரிமையாளர் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் கிளம்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக கண்டி தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.