சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

Tuesday, 22 September 2020 - 16:19

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில், பேருந்துகள், அலுவலக சேவை வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவை வாகனங்கள் மாத்திரம் பயணிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பேருந்து முன்னுரிமை வீதிகளில் குறித்த வாகங்களை தவிர்ந்த வேறு வாகனங்களை செலுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் வீதியின் இரண்டாவது ஒழுங்கையை பயன்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் பிரதான 4 வீதிகளை மையமாக கொண்டு காலை 6 மணி முதல் முற்பகல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் வீதி ஒழுங்கை சட்டம் கடந்த 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய ஹைலெவல் வீதியில் நுகேகொடை - அநுலா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து பித்தலை சந்தி வரையும் பேஸ்லையின் வீதியில் களனி பாலம் முதல் ஹைலெவல் பேஸ்லையின் சந்தி வரையும், காலி வீதியில் வெள்ளவத்தை முதல் லிபட்டி சுற்றுவட்டம் வரையிலும் வீதி ஒழுங்கை சட்டம் அமுலில் உள்ளது.
உள்நாட்டுச் செய்தி

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்து மட்டக்களப்பு - பன்குடாவெளியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யபட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் விவசாயிகள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இன நல்லுறவிற்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.