90 திமிங்கிலங்கள் உயிரிழந்தன...!

Tuesday, 22 September 2020 - 20:23

90+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9...%21
தெற்கு அவுஸ்திரேலியாவில் டஸ்மேனிய கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கலங்களில் 90 திமிங்கலங்கள் உயிரிழந்தன.

சுமார் 270 திமிங்கலங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கரையோதுங்கியுள்ள மேலும் 180 திமிங்கலங்களை காப்பாற்றுவது சவாலுக்குரிய விடயம் என மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கரையொதுங்கியுள்ள திமிங்கலங்கள் சுமார் 7 மீட்டர் நீளமும் 3 டன் எடை கொண்டதாக காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

டஸ்மேனிய கடற்கரையில் திமிங்கலங்கள் கரையொதுங்குவது வழமையாக இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள் 10 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு பாரியளவான தமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளமை இதுவே முதன்முறை என தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் திமிங்கலங்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்களும் கடற்றொழிலாளர்களும் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்;றன.