மர்மான முறையில் உயிரிழந்துள்ள 16 வயது பாடசாலை மாணவி..!

Tuesday, 22 September 2020 - 21:38

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+16+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF..%21
பலாங்கொடை - பின்னவல ஒலுகன்தோட்டை பங்டாரவத்தை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை குறித்த மாணவியின் தாயார் வீடு திரும்பிய போது கட்டிலுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் மகள் காணப்படுவதை அவதானித்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.