நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று

Thursday, 24 September 2020 - 7:41

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 வயதான விஜயகாந்த், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், விஜயகாந்திற்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் தெரிவிக்கவிப்படவில்லை என்றும் தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.