அவுஸ்திரேலியாவில் 380 திமிங்கிலங்கள் உயிரிழப்பு

Thursday, 24 September 2020 - 13:19

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+380+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அவுஸ்திரேலியாவில் 380 திமிங்கிலங்கள் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலை விட்டு கரையொதுங்கியதன் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுளது.

அவுஸ்திரேலிய சரித்திரத்திலேயே இந்த எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் மரணித்தது இதுவே முதல் தடவை என கருதப்படுகின்றது.

மீட்பு பணியாளர்கள் உயிருடன் உள்ள 70 திமிங்கிலங்களை மீட்டு ஆழ்கடலில் விட்டுள்ளதுடன் மேலும் 20 திமிங்கிலங்களை மீட்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும், மீட்கப்படும் திமிங்கிலங்கள் ஆழ்கடலுக்கு செல்ல மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய திமிங்கிலங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியாதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்கள் அதிக வெப்ப தாக்குதலுக்கு உள்ளான நிலையில், உயிருக்காக போராடி வருவதனால், அவற்றை கருணைக் கொலை முறைமையின் கீழ் உயிரை எடுப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக ரஸ்மானியன் கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கி மரணித்துள்ள 400 திமிங்கிலங்களின் சடலங்களை எந்த வகையில் அழிப்பது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆழம் குறைந்த கரையோரத்திலோ அல்லது கடற்கரையிலோ மரணிக்கும் திமிங்கிலங்கள் துரிதகதியில் அழுகும் தன்மையை கொண்டுள்ளதால் சுற்றாடலுக்கு பங்கம் ஏற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய உருப்படியாகவுள்ள இந்த சடலங்களை கடற்கரையில் தாட்பது சிரமமானதாக உள்ளதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.