போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினரின் மற்றுமொரு நடவடிக்கை

Monday, 28 September 2020 - 7:32

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற பகுதிகளிலுள்ள வீதி விளக்குகள் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதாக காவற்துறை போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீதி விளக்குகளின் தரவுகள் பெறப்பட்டு அதிக வாகனங்கள் பயணிக்கு வீதிகளுக்கு அதிக காலமும் குறைந்தளவு வாகனங்கள் பயணிக்கும் வீதிகளுக்கு குறைந்த காலமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கொழும்பையும், அதனை அண்மித்த நகரங்களிலும், பிரதான 4 வீதிகளை மையமாக கொண்டு, காலை 6 மணி காலை 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், இந்த வீதி ஒழுங்கை சட்டம் கடந்த 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

ஹைலெவல் வீதியில் நுகேகொடை - அநுலா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து பித்தலை சந்தி வரையும், பேஸ்லையின் வீதியில் களனி பாலம் முதல் ஹைலெவல் பேஸ்லையின் சந்தி வரையும், காலி வீதியில் வெள்ளவத்தை முதல் லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையிலும் வீதி ஒழுங்கை சட்டம் அமுலில் உள்ளது.

இந்த வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்டு முதல் இரண்டு வாரங்களுக்கு விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்டநடவடிக்கைகள் என்பன மேற்படவில்லை.

எனினும் இன்று முதல் வீதி ஒழுங்கைள சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்டநவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படுமென காவற்துறை போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.