வயிற்று வலியால் துடித்த குழந்தைக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்த மாமா..!

Monday, 28 September 2020 - 16:30

%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE..%21
வயிற்று வலியால் துடித்த குழந்தையை இரும்பினை வெப்பமேற்றி சூடு வைத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

சிறு வலியை கூட தாங்க முடியாத குழந்தையை தீக்காயங்களுக்கு உட்படுத்தினால் எத்தனை வலிகளை அந்த குழந்தை அனுபவித்திருக்கும் என சிந்தித்து பாருங்கள்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பிறந்த ஒரு மாதமேயான குழுந்தை வயிற்று வலியால் நீண்ட நேரம் அழுதுள்ளார்.

இதன்போது அவரின் மாமா இரும் கம்பி ஒன்றினை நன்றாக சென்நிறமாகும்வரை தீயில் வெப்பமேற்றி ஒரு மாத குழந்தையின் வயிற்கு பகுதியில் வைத்துள்ளார்.

No description available.

No description available.

குழந்தை துடிதுடித்து சுவாசிக்க தடுமாறியதும் அயலவர்கள் மற்றும் குடும்பத்தினர் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

குழந்தை சிறிது நேரம் மயக்கத்திலிருந்து வழமைக்கு திரும்பாத நிலையில் வைத்தியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

தற்பொழுது குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத குழந்தைக்கு சூடு வைத்த குழந்தையின் மாமாவை காவல் துறையினர் கைது செய்யவில்லை.

ஏனெனில் அப்பகுதியில் பிள்ளைகளுக்கு நோய்கள் எதுவும் தாக்க கூடாது என்பதால் குழந்தைகளில் வயிற்றில் தீக்காயத்தை ஏற்படுத்துவது வழக்காமாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

எனினும் வைத்தியர்கள் குறித்த குழந்தையின் மாமாவிற்கு கடுமையாக எச்சரித்துள்ளனர்.

No description available.