750 டொலர்களை மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் வரியாக செலுத்தியுள்ளார்...!

Monday, 28 September 2020 - 19:10

750+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும், பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்ற அடுத்த வருடத்திலும், 750 டொலர்களை மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் வரியாக செலுத்தியுள்ளதாக 'நியூயோக் ரைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவிர, கடந்த 15 வருட காலப்பகுதியினில் 10 வருடங்களுக்கு எந்தவிதமான வரியினையும் அவர் செலுத்தவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி செலுத்தியமை குறித்த விபரங்களை வெளியிடாத ஒரே ஒரு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே என அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 1970 ஆம் ஆண்டிற்க பின்னர் வரிசெலுத்தியமை குறித்த விபரங்களை அவர் வெளியிட தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் கொல்ப் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விருந்தகங்கள் நட்டத்தில் இயங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ரீதியாக அவர் நான்கு வருடத்தில் செலுத்தும் வகையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'நியூயோக் ரைம்ஸ்' இனால் வெளியிடப்பட்ட இந்த தகவலை முற்றாக மறுத்துள்ள டொனாலட்; ட்ரம்ப், தமது வரி தொடர்பான விடயங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

'நியூயோக் ரைம்ஸ்' செய்தித்தாளில் வெளியான செய்தியில் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாட்டு செய்தி
ஆமேனியன் (யுசஅநnயைn) மற்றும் அசேரி (யுணநசi) படைகளுக்கு இடையே இன்று இரண்டாவது நாளாக மோதல் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகோர்னோ – கரபாத் எல்லை பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தாக்குதலில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டதுடன் இருநூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக, தென் கௌக்காசஸ் பிராந்தியத்தின் ஊடாக உலக சந்தைக்கு குழாய் மூலம் எடுத்துச் செல்லும் எண்ணெய் விநியோகம் பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற இந்த நாடுகள் அடிக்கடி மோதிக்கொள்வதன் காரணமாக பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்திய ஸ்திரத்தன்மையினை கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என சீனாவும் ரஷ்யாவும் வலியுறுத்தி வருகின்றன.

அதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இடம்பெற்ற பிறிதொரு மோதல் சம்பவத்தில் குறைந்தது 200 இற்கும் மேற்பட்டவர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.