ஸ்பெய்ன் அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

Thursday, 01 October 2020 - 12:30

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%21
கொவிட்-19 தாக்கம் தீவிரமடைந்து வருகின்றமையினால், தலைநகர்  மெட்றிட்டிலும், அதனை அணடியுள்ள பகுதிகளிலும் முடக்க நிலையை அமுலாக்குமாறு ஸ்பெய்ன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு, அத்தியாவசிய தேவையை தவிர்த்து, ஏனைய பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், முடக்கநிலை சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என மெட்றிட் உள்ளுர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்பெய்ன் தலைநகர் மெட்றிட்டில் கடந்த 7 நாட்களில் 27 ஆயிரத்து 698 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2இலட்சத்து 35 ஆயிரத்து 196 ஆக உயர்வடைந்துள்ளது.

ஸ்பெய்னில், கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 69 ஆயிரத்து 188 அதிகரித்துள்ளது.

31 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.