இந்தியாவை விட்டு விலக மறுக்கும் கொரோனா...! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

Thursday, 01 October 2020 - 13:38

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE...%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 179 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், 80 ஆயிரத்து 472 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 இலட்சத்து 3 ஆயிரத்து 418 ஆக உயர்வடைந்துள்ளது.

88 ஆயிரத்து 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 இலட்சத்து 74 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.

9 இலட்சத்து 39 ஆயிரத்து 869 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தை மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.