மூடப்பட்ட அறைகளிலிருந்து கொரோனா தொற்றும் அபாயம்...!

Thursday, 01 October 2020 - 20:48

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...%21
கொவிட் 19 வைரஸ் மூடப்பட்ட அறைகளில் விரைவாக பரவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரசால் தொற்றுறுதியானவர், இருமும்போதும், தும்மும்போதும், பேசும் போதும் வெளிப்படும் உமிழ்நீர் துளிகளால் வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் நடந்த ஆய்வுகளில், கொரோனா வைரஸ் காற்றிலும் பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீண்ட தூரம் வைரஸ் காற்றில் பரவாது என்று சில விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூடப்பட்ட அறைகளில் விரைவாக பரவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமனா இன்டர்னல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உமிழ்நீர்த் துளிகளில்; மூலம் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு எளிதில் பரவக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஆனாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கை கழுவுதல் ஆகியவை உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவில்லை.

அதற்கு பதிலாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்று அமெரிக்க ஜோர்ஜியா பல்கலைக்கழக ஆய்வாளர் யேஷென் தெரிவித்துள்ளார்.