இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!சற்று முன்னர் வெளியான செய்தி

Sunday, 18 October 2020 - 16:27

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88......%21%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
மினுவாங்கொடை - ப்ரெண்டிக் கொத்தணியின் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 22 பேருக்கு கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தகொத்தணியில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 2036ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் அதிகபடியானவர்கள் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள்.

அங்கு 1583 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையில் இதுவரையில் 5497 பேர் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் 2081 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, 3 ஆயிரத்து 403 பேர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர்.

இன்றையதினம் கொவிட்19 தொற்றில் இருந்து மேலும் 8 பேர் குணமடைந்தனர்.