20வது அரசியலமைப்பு திருத்த சட்ட வரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள்..!

Sunday, 18 October 2020 - 19:50

20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்து அதனை வெற்றிப்பெற செய்ய ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதன் நிதிசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று கொத்மலை, பூண்டுலோயா, ஹெரோ தோட்டப் பாதையை செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் இதனைக் கூறினார்.

19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது.

எனவே அடுத்தவாரம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவோம்.

அதற்காக 151 உறுப்பினர்கள் ஆதரவளிக்கவுள்ளனர்.

எதிர்கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.