ரிசாட் பதியுதீனின் ஒத்துழைப்பு தேவையில்லை

Sunday, 18 October 2020 - 19:56

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்து அதனை வெற்றிப்பெற செய்ய ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதன் நிதிசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று கொத்மலை, பூண்டுலோயா, ஹெரோ தோட்டப் பாதையை செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் இதனைக் கூறினார்.

அத்துடன்,20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் ஒத்துழைப்பு தேவையில்லை என்று, ராஜாங்க அமைச்சர் நிமால் லான்சா தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அந்தஸ்த்து இருக்கிறது.

20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுக் கொள்ள அது போதும்.

ரிசாட் பதியுதீன், எதிர்கட்சித் தலைவர் அல்லது அவருக்கு ஆதரவான ஒருவரின் இல்லத்தில் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கியது என்று அவர் கூறியுள்ளார்.