ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sunday, 18 October 2020 - 21:58

%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
வெலிகம-மூதுகமுவ பிரதேசத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் 47 கிராம் 200 மில்லிகிராமுடன் சந்தேக நபர் ஒருவரை மாத்தறை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு வகையான போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் 14,500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய மூதுகமுவ-வலவ்வத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் மாத்தறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.